முதல் ஒருநாள் போட்டி : நாளைய போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியாக இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதே வேளையில் இரண்டு தொடர்களையும் கைப்பற்றிய இந்திய அணி இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

indvseng

இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது இந்திய அணியில் அதிக அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் நாளை ஒருநாள் போட்டியில் எந்த வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாளைய போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் குறித்த அணியை இந்த பதிவில் காண்போம்.

அதன்படி நாளைய போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்குவார்கள். மேலும் 3வது வீரராக கோலியும், 4-வது வீரராக கே.எல் ராகுல் ஆகியோரும் களமிறங்குவது உறுதிதான். அதேபோன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பண்ட்டும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்கள். மேலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் இந்திய அணியில் ஒரு சுழல் பந்து ஆல்ரவுண்டராக க்ருனால் பாண்டியா இடம் பெறுவார்கள்.

Dhawan-Pandya

அதேபோன்று மீதமுள்ள நான்கு பந்துவீச்சாளர்கள் ஆக புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாகூர், நடராஜன் மற்றும் சாஹல் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உத்தேசமாக கணிக்கப்பட்ட அணி தான் நாளைய போட்டிக் போட்டிக்கான உத்தேச லெவன் அணி இதோ :

- Advertisement -

Chahal

பிளேயிங் லெவன் அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல்.ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) சாஹல், 11) நடராஜன்.