மூன்றாவது டெஸ்ட் : சுருண்டு போன இங்கிலாந்து. தெளிவான பிளான் போட்டு சக்ஸஸ் செய்த கோலி – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

cup

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி குவித்த குறைந்தபட்ச ஸ்கோர்களில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

axar1

மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன் குவிக்கலாம் என்று இங்கிலாந்து அணி யோசித்ததெல்லாம் சரிதான். ஆனால் இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று என்று போட்டிக்கு முன்னரே கணித்த விராட் கோலி இந்த போட்டியில் அக்சர் படேல் மற்றும் அஷ்வினுடன் சேர்த்து வாஷிங்டன் சுந்தர்யையும் அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

axar

அவர் கணித்தபடியே சுழல் பந்து வீச்சு இன்றைக்கு முழுவதும் கைகொடுக்க அக்சர் மற்றும் அஸ்வின் இணைந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சாய்த்து விட்டனர். கோலி செய்த இந்த யோசனை இங்கிலாந்து அணியை வீழ்த்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.