இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி ? – கடைசி டெஸ்ட் நடைபெறுமா ?

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி 5 ஆவது போட்டி மான்செஸ்டரில் நாளை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்றிருக்கும் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவ்வேளையில் தற்போது மற்றொரு நபராக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி வீரர்கள் முக்கிய நபர்கள் இன்றி இந்த போட்டியில் கலந்து கொண்டாலும் பயிற்சியாளர்கள் யாருமின்றி மான்செஸ்டர் நகரத்திற்கு பயணித்துள்ளது.

ind

இந்நிலையில் தற்போது இன்று கடைசி நாள் பயிற்சி ரத்து செய்யப்பட்ட வேலையில் இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நாளைய போட்டி நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement