IND vs BAN : பங்களாதேஷ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரு வாரங்களில் முடிவடையவுள்ள இந்த உலகக் கோப்பை தொடரின் அறையிறுதியை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியானது கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி அடுத்தடுத்து நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரேயான தொடர்களில் விளையாட இருக்கிறது.

இதில் ஏற்கனவே நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி முற்றிலுமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த பதிவில் 17 பேர் கொண்ட ஒருநாள் அணி முழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஓய்வில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, துணைக்கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதுமட்டும் இன்றி மேலும் சில மாற்றங்கள் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய வாய்ப்பின்றி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள் சிலருக்கும் இந்த தொடரில் பங்கேற்று விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் 17 பேர் கொண்ட முழு லிஸ்ட் இதோ : இந்த பங்களாதேஷ் தொடரானது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டிசமபர் 26 ஆம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கொஞ்சம் பொறுங்க. தினேஷ் கார்த்திக்கை நாங்க முழுசா இன்னும் ஒதுக்கல – சேத்தன் சர்மா கொடுத்த விளக்கம்

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) கே.எல் ராகுல் (து.கேப்டன்), 3) ஷிகார் தவான், 4) விராட் கோலி, 5) ரஜத் பட்டிதார், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) ராகுல் திரிப்பாதி, 8) ரிஷப் பண்ட், 9) இஷான் கிஷன், 10) ரவீந்திர ஜடேஜா, 11) அக்சர் படேல், 12) வாஷிங்க்டன் சுந்தர், 13) ஷர்துல் தாகூர், 14) முகமது சிராஜ், 15) முகமது ஷமி, 16) தீபக் சாகர், 17) யாஷ் தயாள்.

Advertisement