ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தயக்கம் காட்டும் இந்திய அணி – விவரம் இதோ

INDvsAUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணி திடீரென ஆஸ்திரேலியாவில் தோற்றதும், இரண்டாவது போட்டியில் விராட் கோலி சென்ற பின்னர் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற போகிறது.

indvsaus

இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இரு அணிகளும் முன்நிலையை தக்க வைக்க முயற்சி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய அணியின் கெடுபிடியாக இருக்கும் என்பது போல் தகவல் வெளியாகியிருக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டிக்கு மெல்பேர்ன் மைதானத்தில் இருந்து சிட்னி மைதானத்தில் இரு அணி வீரர்களும் செல்லப் போகின்றனர்.

அங்கு சென்றவுடன் கண்டிப்பாக அங்கும் தனிமை முகாமில் அனைவரும் இருக்க வேண்டும் என்ற கெடுபிடியான விதி இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கொடுத்த பேட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் துபாயில் 14 நாட்கள் தனிமையில் இருந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு வந்த பின்னரும் 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் கிட்டத்தட்ட சில மாதங்கள் தனியாக இருந்து விட்டு அதன் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தவுடன் மீண்டும் தனியாக இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

IND

தற்போது கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னேறும் தனிமை முகாமிற்கு செல்ல வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அனைவரும் தொடர்ந்து தனிமை முகாமில் தான் இருக்கின்றனர். இப்படியே சென்றால் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிரமத்திற்கு உள்ளாகி விடும் என்று தெரிவித்து இருக்கிறார் அந்த அதிகாரி.

- Advertisement -

மேலும் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹடின் கூறுகையில் : இந்திய அணி வீரர்களுக்கு இதுபோன்ற கெடுபிடிகள் இருக்கும் என்று தெரிந்திருக்கும். அவர்கள் அதனை தெரிந்துவிடும் இவ்வாறு கூறுவது தவறு. மேலும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் மைதானத்தில் எந்த அணியும் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து வெற்றி பெற்றதில்லை என்ற கார்ஸனத்தினாலும் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தயங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.