லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ராசியில்லாத மான்செஸ்டர் மைதானம் : ஓர் அலசல்
அதனை தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இவ்வேளையில் போட்டி நடைபெற இருக்கும் இந்த மான்செஸ்டர் மைதானத்தின் வரலாற்று புள்ளி விவரங்களை பார்த்தால் அது இந்திய அணிக்காக சாதகமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் இந்த ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் இந்திய அணி 9 முறை விளையாடி இருக்கிறது. ஆனால் ஒன்றில் கூட இந்திய அணி இதில் வெற்றி பெற்றது கிடையாது.
இங்கிலாந்து அணி நான்கு முறை வெற்றியும், ஐந்து முறை போட்டியை டிராவும் செய்துள்ளது. அதனால் இந்திய அணி இந்த மைதானத்தில் வெற்றி பெற கடுமையான போராட்டத்தினை அளிக்க வேண்டும் என்றும் தெரிகிறது. அதுமட்டும் இன்றி போட்டி நடைபெறும் இந்த ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் கடந்த 35 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய வீரரும் சதத்தை பதிவு செய்யவில்லை.
கடைசியாக 1990 ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக சச்சின் டெண்டுல்கர் இந்த மைதானத்தில் 119 ரன்களை குவித்தார். அவருக்கு முன்னதாக இந்த மைதானத்தில் ஏழு இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஆனால் சச்சினுக்கு அடுத்து 35 ஆண்டுகளாக எந்த ஒரு வீரரும் இங்கு சதம் அடித்ததில்லை.
இதையும் படிங்க : ஒருவழியா உச்சத்தை தொட்டுள்ள ராகுல் 50 நெருங்காம விடக்கூடாது.. டெக்னிக்கல் மாற்றம் பற்றி சாஸ்திரி பேட்டி
அப்படி பார்க்கையில் நிச்சயம் இந்த மைதானம் அடுத்த நான்காவது போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சவாலை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி சூழ்நிலைகள் எல்லாம் தாக்குப்பிடித்து வெற்றி பெற்றால் நிச்சயம் அது ஒரு வரலாற்று வெற்றியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.



