விராட் கோலி தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருக்கும் நிலையில் இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற உள்ள மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அங்கு சென்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களை அணியில் எடுத்து இந்த புதிய இந்திய அணி உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஏகப்பட்ட வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் அதுதவிர 6 வீரர்கள் தற்போது புதிதாக அறிமுகமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த இலங்கை தொடரில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இன்று மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போது இலங்கை அணி இருக்கும் நிலையைப் பார்த்தால் ஒரு போட்டியில் கூட அவர்கள் இந்திய வீழ்த்த முடியாது என்றே தெரிகிறது.
இந்திய அணியில் இருக்கும் அனைவரும் இளம் வீரர்கள் என்றாலும் அவர்களது ஆட்டத்திற்கு நிச்சயம் இலங்கை அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியாது என்பதால் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய உத்வேகத்தில் உள்ளது.
ஏனெனில் கடந்த 1997ஆம் ஆண்டு தான் இலங்கை மண்ணில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் 24 ஆண்டுகளாக இதுவரை அவர்கள் இந்திய அணியை அங்கு வீழ்த்தியதே கிடையாது. எனவே இந்த சாதனையை தவான் தலைமையிலான அணி தக்க வைக்குமா? என்பதை இந்த தொடரின் முடிவில் தான் நாம் அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.