நியூசிலாந்து அணியை வீழ்த்தனுனா இவரை அவுட் ஆக்கியே ஆகனும் – இல்லனா இந்தியா கதை அவ்ளோதான்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட இரண்டாவது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் குவித்தனர்.

kohli rahane

- Advertisement -

நியூசிலாந்து அணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களான லாதம் 30 ரன்களும், கான்வே 54 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டைலர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருப்பதனால் நியூசிலாந்து அணி தற்போது பலமாக உள்ளது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்களை குவித்துள்ளதால் நியூஸிலாந்து அணி இன்னும் இந்திய அணியை விட 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

taylor

வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளதால் நிச்சயம் இந்திய அணியை விட அதிகமான ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை இந்திய அணி கட்டுப்படுத்த வேண்டுமாயின் நிச்சயம் கேன் வில்லியம்சன் விக்கெட்டை விரைவில் வீழ்த்தியாக வேண்டும்.

williamson

இல்லையெனில் வில்லியம்சன் 30 ரன்களை கடந்து நன்றாக செட்டில் ஆகி விட்டால் அவரை வீழ்த்துவது கடினம் என்பதால் அவர் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக வில்லியம்ஸ்சனை விரைவில் வீழ்த்தவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணி சறுக்கலை சந்திக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement