- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடைசி 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற அவர் ரொம்ப முக்கியம்.. கம்பீரின் முடிவு என்ன? – விவரம் இதோ

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றினை பெற்றுள்ளதால் இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

கடைசி 2 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அவர் அவசியம் :

அதனை தொடர்ந்து இந்த தொடரின் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் நவம்பர் 6-ஆம் தேதி மற்றும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற இருக்கின்றன. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெறும் அணியே இந்த தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த தொடரின் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் விளையாடினால் தான் இந்திய அணி வெற்றி பெறும் என்றும் அதனால் அவரை தொடர்ச்சியாக அணியில் விளையாட வைக்க வேண்டும் என்றும் இந்திய ரசிகர்கள் சமூகவலைதளத்தின் மூலம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் முதல் இரண்டு போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடி இருந்தார். கௌதம் கம்பீர் தனிப்பட்ட முறையில் ஹர்ஷித் ராணாவை ஆதரித்து தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருவதால் அர்ஷ்தீப் சிங் வெளியே அமர வேண்டிய நிலை கடந்த பல போட்டிகளாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் மூன்றாவது போட்டியின் போது வாய்ப்பினை பெற்ற அர்ஷ்தீப் சிங் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான டிராவிஸ் ஹெட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஜாஷ் இங்கிலீஷ் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இதையும் படிங்க : உலககோப்பை வரலாற்றில் வீரேந்தர் சேவாக்கின் மாபெரும் சாதனையை தகர்த்த ஷபாலி வர்மா – விவரம் இதோ

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நடத்தும் அவர் கடைசி இரண்டு போட்டிகளிலும் பும்ராவுடன் இணைந்து விளையாடினால் நிச்சயம் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும் என்பதனால் கடைசி இரண்டு போட்டிகளில் கௌதம் கம்பீர் எந்த புதிய முடிவையும் எடுக்காமல் தொடர்ச்சியாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -