ஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் செய்த சாதனை – விவரம் இதோ

IND-1

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையும், இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரையும் 2-1 என கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது.

pant-1

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததால் அவுஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றியால் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. பல வருடங்களாக பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றியை மட்டும் கண்டு வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது தோல்வியை கண்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கிறது. ஒரு போட்டியில் ட்ரா ஆகியிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி 71.7%, 430 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது.

- Advertisement -

ind

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி பி.சி.சி.ஐ சார்பில் இந்திய அணிக்கு 5 கோடி போனஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.