மழையால் முதல் நாள் ரத்து. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி இன்று மழை காரணமாக முழுவதுமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்தப் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வந்த வேளையில் தற்போது மழை மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தடைபட்டுள்ளது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் பலமான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நியூசிலாந்து அணி தற்போது வரை அவர்களது பிளேயிங் லெவனை வெளியிடவில்லை. மேலும் டாசிற்கு பிறகே பிளேயிங் லெவனை அறிவிக்க உள்ள நியூஸிலாந்து அணியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களம் இறங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது.

மழை பெய்யாமல் மைதானம் காய்ந்து இருந்தால் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதன் அடிப்படையில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தது. ஆனால் போட்டியின் முதல் நாளான இன்று முழுவதும் அங்கு மழை பெய்துள்ளதால் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கை கொடுக்காது என்றும் அதனால் இந்திய அணி ஒரு சில மாற்றங்களை செய்யலாம் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jadeja

அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது கூடுதலாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக சிராஜ்ஜையோ அணியில் இணைக்க இந்திய அணி திட்டமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டாஸ் போடும்வரை எதுவும் உறுதி செய்யப்படாது என்றும் அதன் பிறகு கேப்டன் கோலி என்ன முடிவு எடுக்கிறாரோ அதுவே உறுதியானது என்பதால் நிச்சயம் கோலி சில மாற்றங்களை செய்யவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Siraj

இந்திய நேரப்படி ஜூன் 18-ஆம் தேதி மூன்று முப்பது மணிக்கு துவங்க இருந்த இந்தப் போட்டி முதல் நாள் முழுவதும் நடைபெறாமல் போனது மிகப் பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒருவேளை இந்த போட்டி நடைபெறாமல் போனாலோ அல்லது டிரா ஆனாலோ இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement