
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி இந்த தொடரிலும் மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது.
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. இவ்வேளையில் நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இப்படி ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனான முதல் இரண்டு தொடர்களிலேயே மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். அதுமட்டும் இன்றி நேற்று நடைபெற்ற போட்டியில் தோற்றத்தின் மூலம் இந்திய அணி ஒரு மோசமான சாதனையை சர்வதேச டி20 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்தவகையில் இந்திய அணி நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : அயர்லாந்து தொடர் மற்றும் இந்த இங்கிலாந்து தொடர் என இரண்டையும் சேர்த்து தொடர்ந்து 5 போட்டிகளாக இந்திய அணி வெற்றி பெறாமல் இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திய அணி இதுபோன்று தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்தது கிடையாது.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களிலேயே எல்லாம் முடிஞ்சி போச்சு.. 3ஆவது போட்டியின் தோல்விக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்
அப்படி ஒரு மோசமான நிலையை தற்போது இந்திய அணி சந்தித்துள்ளது. இருப்பினும் இந்த தொடரின் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை இந்திய அணி சமன் செய்யும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.