இதெல்லாம் யாரும் நெனச்சி கூட பாத்திருக்க மாட்டாங்க. இந்தியா கொடுத்த கம்பேக் – வரலாற்று வெற்றி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே குவித்தது.

ind vs eng

- Advertisement -

அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களை குவித்தது. இதனால் நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோற்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது இம்முறை பேட்ஸ்மேன்களின் அபார ஆட்டம் காரணமாக 466 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ரோஹித் சர்மா 127 ரன்களும், புஜாரா, பண்ட், தாகூர் என மூவரும் அரை சதம் அடித்து இந்திய அணிக்கு ரன் குவிப்பிற்கு பலம் சேர்த்தனர். இறுதியில் பும்ரா மற்றும் உமேஷ் யாதவும் முடிந்தளவு ரன்களை சேர்த்தனர். இப்படி அனைவரின் பங்களிப்பு காரணமாக 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

rohith 6

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி அது ஒரு கட்டத்தில் 100 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் பலமாக இருந்தது. ஸ்கோர் சரியாக 100 ரன்களில் இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் அடுத்த 40 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தத்தளித்தது.

umesh

ஜோ ரூட் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் களத்தில் நிற்காததால் இங்கிலாந்து அணி இறுதியில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து இந்த தொடரிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி பெற்ற இந்த அட்டகாசமான வெற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement