அடப்பாவமே இது என்ன கோலிக்கு வந்த சோதனை. 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தோல்வி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ishanth 1

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்தது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

Ind

இந்த தோல்வியின் மூலம் நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி கேப்டன் கோலியின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் நான்காவது தோல்வியாக இந்த தோல்வி பதிவாகியுள்ளது. கடைசியாக 2016 17 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது தோல்வியை சந்தித்துள்ளது.

Rahane

இதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் என தற்போது நான்காவது தோல்வியை விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்று உள்ளது. ஆகையால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி விட்டு ரஹானேவிற்கு கேப்டன் பதவியை கொடுக்கும் படியும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement