- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs NZ : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும், ஜனவரி 21-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நாளை ஜனவரி 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளதால் மூன்றாவது போட்டியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இரண்டாவது போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அவர்களுடைய பணிச்சுமையை குறித்தும் அதிகம் யோசிக்க வேண்டிய உள்ளதாக பேசியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் நாளைய போட்டியில் வேகப்பந்துவீச்சு துறையிலும் ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை ஒரு உத்தேசமாக உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி கடந்த இரண்டு போட்டியிலும் துவக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் அவருக்கு ஓய்வினை வழங்கி அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கப்படலாம்.

அதே போன்று மிடில் ஆர்டரில் கே.எஸ் பரத்திற்கோ அல்லது ரஜத் பட்டிதாருக்கோ அறிமுக வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் கே.எஸ் பரத் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் விக்கெட் கீப்பர் சாய்ஸாக இருப்பதால் அவருக்கு போதிய பிராக்டீஸ் அவசியம் என்பதனால் இந்த போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்துவீச்சு துறையில் முதல் இரண்டு போட்டிகளில் குல்தீப் யாதவ் விளையாடியிருந்தாலும் நல்ல பார்மில் பெஞ்சில் அமைந்திருக்கும் சாஹலுக்கு நாளைய போட்டியில் மீண்டும் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து வேகப்பந்துவீச்சு துறையில் சிராஜ் அல்லது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் விளையாட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : ஹேய் எப்புட்றா, ஒரே பந்தில் 16 ரன்களை விளாசிய ஸ்டீவ் ஸ்மித் – இந்தியாவை அச்சுறுத்தும் பார்மில் வெறித்தன பேட்டிங்

அதேபோன்று ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சபாஷ் அகமது இடம்பெறவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எது எப்படி இருப்பினும் நிச்சயம் நாளைய போட்டியில் இரண்டு அல்லது மூன்று மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பது உறுதி.

- Advertisement -
Published by