அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முற்றிலுமாக இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் ஒரு பெரிய சிக்கலை சந்தித்தது. ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி முற்றிலுமாக கைப்பற்றி இருந்தால் பலமான முன்னிலையுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்திருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல என்ன வழி? :
ஆனால் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி மூன்று போட்டியில் தோற்றதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்கிற இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது பெர்த் நகரில் கடந்த நவம்பர் 22-ம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்த முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி 259 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலிலும் 110 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்ல என்ன வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.
அதன்படி நடைபெற்று முடிந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் அசத்தலான வெற்றி பெற்று இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை அப்படியே நிறுத்தாமல் அடுத்ததாக அடிலெய்டில் நடைபெற இருக்கும் பகலிரவு போட்டியிலும், அதன்பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி விடும்.
இதையும் படிங்க : 161 ரன்ஸ் அடிச்ச ஜெய்ஸ்வாலுக்கு தராமல் ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட – என்ன காரணம்?
இப்படி இந்த மூன்று வெற்றிகளை பெற்ற பின்னர் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டியில் ஒரு டிரா செய்தாலே இந்திய அணி எந்த சிக்கலும் இன்றி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். அப்படி இல்லை என்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.



