இவரை மட்டும் தூக்கிட்டா போதும். இந்திய அணி வெயிட் ஆயிடும் – கோலி கையிலிருக்கும் முடிவு

Pant-1
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்சத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களை மட்டுமே அடித்து இந்திய அணி சுருண்டது.

- Advertisement -

இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நான்காவது போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்தால் இந்திய அணி மேலும் பலப்படும் என்பது எங்களின் கருத்து.

pant 2

அதன்படி விக்கெட் கீப்பராக துவக்க வீரர் ராகுல் செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் மேலும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடியும். ஏனெனில் இந்திய அணியின் டாப் 5 வீரர்களை நிச்சயம் மாற்ற முடியாது என்ற காரணத்தினால் ராகுல் கீப்பராக செயல்படும் பட்சத்தில் விஹாரி அல்லது சூரியகுமார் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் அணியில் விளையாடும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் பலப்படும் என்பதே எங்களது கருத்து.

ரிஷப் பண்ட் இந்த தொடரின் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 87 ரன்களை மட்டுமே குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விராட் கோலி இந்த முடிவை எடுப்பாரா ? என்பது போட்டியின் துவக்கத்தில் தான் தெரியும் இது குறித்து உங்களது கருத்து என்ன ?

Advertisement