- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுவரை வெற்றியே கிடைக்காத மைதானத்தில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – சாதனை நிகழ்த்துமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் காரணமாக இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

எட்ஜ்பேஸ்டனில் சாதிக்குமா இந்திய அணியின் இளம்படை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியை இரண்டாவது போட்டியிலும் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களம் காண்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நடைபெற இருக்கும் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை வெற்றியே பெற்றதில்லை என்பதினால் இந்திய அணிக்கு அங்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

அதனை முறியடித்து இந்திய அணி சாதிக்குமா? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி ஏற்கனவே சொந்த மண்ணில் மிக வலுவான அணியாக திகழ்கிறது. அதுமட்டும் இன்றி தற்போது போட்டி நடைபெறும் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனால் கூடுதல் அழுத்தம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த மைதானத்தில் இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 6 தோல்விகளையும், ஒரு டிராவை மட்டுமே பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள காபா மைதானத்தில் இந்திய அணி வெற்றியே பெற்றதில்லை என்கிற நிலையில் இருந்து வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் – விவரம் இதோ

அதேபோன்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்திலும் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இருந்தாலும் தற்போதுள்ள இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்த வேண்டுமெனில் மிகச் சிறப்பான ஆட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அங்கு வெற்றிபெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -