மாபெரும் சாதனையுடன் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி – விவரம் இதோ

IND vs AFG
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முள்ளான்பூர் நகரில் ஜூன் 6-ம் தேதி துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் குவித்து அசத்தியது.

மாபெரும் சாதனையுடன் வெற்றி பெற்ற இந்திய அணி :

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு சுருண்டது. அதனை தொடர்ந்து பாலோ ஆன் பெற்று தொடர்ச்சியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதன் காரணமாக இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பெற்ற பெரிய வெற்றியாக இந்த வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி கடந்து 2018-ஆம் ஆண்டு ராஜ்கோட் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியாக இருந்து வந்தது.

இவ்வேளையில் அந்த சாதனையை இந்த போட்டியில் முறியடித்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் சாதனையுடன் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அறிமுக போட்டியிலேயே 7 ஆவது இந்திய வீரராக மானவ் சுதர் மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்த ஒரு டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement