டி20 உ.கோ தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – வீரர்களின் லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கு நடத்த முடியாத சூழலில் பலகட்ட ஆலோசனைக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.

Cup

- Advertisement -

அதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் 4 அணிகள் தகுதி சுற்று முடிவின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் உலக கோப்பை தொடர் துவங்க இடையில் ஒரு மாதமே உள்ளதால் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் அனைத்தும் தங்களது கிரிக்கெட் அணியின் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் தங்களது அணியை அறிவித்து விட்ட நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Rohith-1

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக இந்த உலகக்கோப்பை தொடரில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து இருக்கப்போவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :

1) விராட் கோலி (கேப்டன்), 2) ரோஹித் சர்மா (து.கேப்டன்), 3) கே.எல் ராகுல், 4) சூரியகுமார் யாதவ், 5) இஷான் கிஷன், 6) ரிஷப் பண்ட், 7) ஹார்டிக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) அஷ்வின், 10) வருண் சக்கரவர்த்தி, 11) அக்சர் படேல், 12) பும்ரா, 13) முகமது ஷமி, 14) புவனேஷ்வர் குமார், 15) ராகுல் சாகர்

Advertisement