
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறயிருக்கும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்த இரண்டு டி20 தொடர்களுக்கான இந்திய அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட அணியில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போலவே கேப்டன் சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்த ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துவக்க வீரரான 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் அணியில் முதல் முறையாக இடம் கிடைத்துள்ளது. எதிர்வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்குமான 16 பேர் கொண்ட இந்திய டி20 அணி இதோ :
இதையும் படிங்க : யார் இந்த மானவ் சுதர்? இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க என்ன காரணம்? – விவரம் இதோ
1) ஷ்ரேயாஸ் ஐயர், 2) அபிஷேக் ஷர்மா, 3) சஞ்சு சாம்சன், 4) இஷான் கிஷன், 5) திலக் வர்மா, 6) ஷிவம் துபே, 7) நிதீஷ் குமார் ரெட்டி, 8) அக்சர் பட்டேல், 9) வாஷிங்டன் சுந்தர், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ரவி பிஷ்னாய், 12) ஹர்ஷித் ராணா, 13) முகமது சிராஜ், 14) அர்ஷ்தீப் சிங், 15) பிரின்ஸ் யாதவ், 16) வைபவ் சூர்யவன்ஷி.