தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
Advertisement

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டியில் முடிவில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானதும் நடைபெற உள்ளது.

INDvsRSA Cup

அதன்படி அக்டோபர் 6-ஆம் தேதி லக்னோவில் முதல் போட்டியும், அக்டோபர் 9-ஆம் தேதி ராஞ்சியில் இரண்டாவது போட்டியும், அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லியில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரபூர்வமாக தங்களது டிவிட்டர் பக்கத்தின் மூலம் நேற்று அறிவித்தது. அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஷிகார் தவான் தலைமையில் 16 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் தர இந்திய வீரர்களுக்கு முழுவதுமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடி வரும் தீபக் சாகர் மட்டும் கூடுதலாக அந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

அவரை தவிர்த்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் வீரர்களுக்கு முற்றிலுமாக இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் அவர் விளையாடவில்லை. விலகலை உறுதி செய்து – பி.சி.சி.ஐ அறிவிப்பு

1) ஷிகார் தவான், 2) ஷ்ரேயாஸ் ஐயர், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) ரஜத் பட்டிதார், 6) ராகுல் திரிப்பாதி, 7) இஷான் கிஷன், 8) சஞ்சு சாம்சன், 9) சபாஷ் அகமது, 10) ஷர்துல் தாகூர், 11)குல்தீப் யாதவ், 12) ரவி பிஷ்னாய், 13) முகேஷ் குமார், 14) ஆவேஷ் கான், 15) முகமது சிராஜ், 16) தீபக்சாகர்.

Advertisement