தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு – முழுலிஸ்ட் இதோ

IND
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது வரும் 29ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 9ஆம் தேதி துவங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்த விவரம் ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

Indian Team

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்று பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மூலமாக இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

அதில் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக பினிஷராக சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதேபோன்று பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ள இளம் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அதேபோன்று வேகப்பந்து வீச்சில் அசத்திய இளம் நட்சத்திரங்களான உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளதால் இளம் வீரர்களான இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களாகவே தனது பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டி இந்திய அணியில் ஒதுங்கியிருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இணைந்துள்ளார். கூடுதல் ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் கேப்டனாகும் அளவிற்கு அவர் தகுதியானவர். சாதாரண வீரர் கிடையாது – பாண்டிங் புகழாரம்

அதன்படி தென் ஆப்பிரிக்க தொடருக்கான t20 இந்திய அணியின் முழு லிஸ்ட் இதோ : கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

Advertisement