9 வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றம். 4 வீரர்களுக்கு அறிமுகம் – இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ

INDvsSl-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் க்ருனால் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 9 வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணி முற்றிலுமாக மாறியுள்ளது.

INDvsSL

ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த ஒன்பது வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை மேலும் அடுத்த போட்டிக்கான அணியிலும் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அந்த ஒன்பது வீரர்களுக்கு பதிலாக இன்று இந்திய அணியில் நான்கு வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.

- Advertisement -

அதன்படி துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் படிக்கல் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்கள். படிக்கல் 3 ஆவது வீரராக களமிறங்கவுள்ளார். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் நிதீஷ் ராணா அறிமுகமாகியுள்ளார். பவுலர்களில் சேத்தன் சக்காரியா இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.

varun

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இந்திய அணியில் வெறும் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்த போட்டியில் விளையாடுகின்றனர். வீரர்கள் இல்லை என்ற காரணத்தினால் தற்போது 6 பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இது எந்த அளவுக்கு இந்திய அணிக்கு சாதகத்தை தரும் என்பது போட்டியின் முடிவில் தான் தெரியவரும்.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) தவான், 2) கெய்க்வாட், 3) படிக்கல், 4) சாம்சன், 5) ராணா, 6) புவனேஷ்வர் குமார், 7) குல்தீப் யாதவ், 8) வருண் சக்ரவர்த்தி, 9) ராகுல் சாகர் 10) சைனி, 11) சக்காரியா

Advertisement