3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள் – கேப்டன் சூரியகுமார் அறிவிப்பு

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்திருந்தது.

இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள் :

அதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியானது முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாசிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடுவதாக தெரிவித்தார்.

- Advertisement -

அதோடு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளார். மூன்றாவது மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்க்க காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஜிதேஷ் சர்மா, 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்ரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement