- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 3 மாற்றங்கள் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஜூன் 20-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் மூன்று வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மூன்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரண்டாவது போட்டியின் போது விளையாடிய கே.எல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : 27 கோடி இனிமே கிடையாது.. பாதி விலையுடன் லக்னோ அணியிலிருந்து வெளியேறும் ரிஷப் பண்ட் – டிரேட் தகவல் இதோ

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) ரோஹித் சர்மா, 3) சுப்மன் கில், 4) இஷான் கிஷன், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) நிதீஷ் ரெட்டி, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ஹர்ஷ் துபே, 9) பிரசித் கிருஷ்ணா, 10) குர்னூர் பிரார், 11) பிரின்ஸ் யாதவ்.

- Advertisement -