இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு இவரே கேப்டன். 5 புதுமுக வீரர்களுக்கு அணியில் இடம் – பட்டியல் இதோ

Ind
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை மாதம் 13, 16, 19 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 22, 24,27 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

IND

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதால் இந்திய அணியின் இளம் வீரர்களை கொண்ட ஒரு புதிய அணி இந்த தொடரில் விளையாடும் என ஏற்கனவே சௌரவ் கங்குலி குறிப்பிட்டிருந்தார். அதன்படி தற்போது இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அனுபவ வீரரான ஷிகர் தவானுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இத்தொடரை கேப்டனாக தவானே பொறுப்பேற்று அணியை வழிநடத்துவார்.

அதேபோன்று ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அணியில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் கட்டாயம் விளையாடுவார்கள், க்ருனால் பாண்டியா ஆல்-ரவுண்டராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், வருன் சக்ரவர்த்தி, சாஹல், சைனி என பவுலர்கள் பட்டாளமும் இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று தெரிகிறது.

Dhawan

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் மேலும் 5 புதுமுகங்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த தொடரில் இடம் பெறவுள்ள புதுமுகங்கள் தேவ்தத் படிக்கல், வருன் சக்ரவர்த்தி, ராகுல் தேவாடியா, ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொடருக்கான உத்தேச இந்திய அணி இதோ : 1)தவான்(கேப்டன்), 2)ப்ரித்வி ஷா, 3)படிக்கல், 4)சூரியகுமார் யாதவ், 5)இஷான் கிஷன், 6)ஹர்டிக் பாண்டியா, 7)க்ருனால் பாண்டியா, 8)ராகுல் தேவாதியா, 9)வருண் சக்ரவர்த்தி, 10)சாஹல், 11)ராகுல் சாகர், 12)தீபக் சாகர், 13)சைனி, 14)ஹர்ஷல் படேல், 15)ரவி பிஷ்னோய், 16)புவனேஷ்வர் குமார், 17)நடராஜன்.

Advertisement