- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs IRE : ரெண்டாவது மேட்ச்ல நாம ஜெயிக்க அந்த 2 ஓவர்தான் காரணமே – அப்படிதான் ஆடனும்

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தற்போது கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் டக் வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அதன்படி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் குவித்து அசத்தினார்.

பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக கடைசி இரண்டு ஓவர்களே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பதினெட்டாவது ஓவர் முடிவு வரை இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. எனவே இறுதியில் இந்திய அணி 160 ரன்கள் வரை தான் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : எங்கள பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா? அவரால மட்டும் ஒத்த கைல உ.கோ வாங்கி கொடுக்க முடியாது – ரோஹித் கோபம், காரணம் இதோ

ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி 42 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கை 185-க்கு உயர்த்தியது. குறிப்பாக ஷிவம் துபே 16 பந்துகளில் 22 ரன்களையும், ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்களையும் குவித்து அசத்தினர். அவர்கள் இருவரது மிகச் சிறப்பான பினிஷிங் காரணமாகவே இந்திய அணி பெரிய ரன் குவிப்பை எட்டியதோடு அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தவும் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by