தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. நாளை 12ம்தேதி தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாடும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காயத்தால் கடந்த சில தொடர்களில் விளையாடாத ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நிச்சயம் நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான உத்தேச அணியை இந்த பதிவில் பார்ப்போம். துவக்க வீரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷாவும் இந்திய அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்குவார்கள்.

ராகுல் விக்கெட் கீப்பிங் செய்துகொண்டு ஐந்தாவது வீரராக களம் இறங்குவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐந்தாவது வரிசையில் ராகுல் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. மேலும் மூன்றாவது வீரராக கோலியும், நான்காவது வீரராக ஐயர் களம் இறங்குவதால் ஐந்தாவதாக ராகுல் களமிறங்குவார்.
அதுமட்டுமின்றி கடந்த பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்டியா தற்போது தனது திறமையை மீண்டும் வெளிக்காட்டி இருப்பதால் பாண்டியா ஆறாம் இடத்தில் களம் இறங்குவார். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங் ஒத்துழைக்கும் என்பதால் ஏழாம் இடத்தில் ஜடேஜா இறங்குவார்.

8 மற்றும் 9 ஆகிய இடத்தில் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். மேலும் பாஸ்ட் பவுலர்களாக 10 ஆம் இடத்தில் புவனேஸ்வர் குமார் மற்றும் 11 ஆம் இடத்தில் பும்ராவும் விளையாடுவார்கள்.



