இந்திய அணியில் சரியான தகுதியில்லாமல் தேர்வாகி விளையாடிய 5 வீரர்கள் – பட்டியல் இதோ

Dube
- Advertisement -

இந்திய அணி தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களையும் டெஸ்ட் போட்டிகளில், 300க்கும் மேற்பட்ட வீரர்களை ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வைத்துள்ளது. ஒரு சில கடினமான காலங்களில் இந்திய அணியில் விளையாட தகுதியற்றவர்கள் கூட தேர்வாகி விளையாடி உள்ளனர். அப்படி விளையாடி வெகு சீக்கிரமாக தகுதியில்லை என்று வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை தற்போது காண்போம்.

vrv

- Advertisement -

வி.ஆர்.வீ சிங் :

இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இவரது பந்து வீச்சும் படுமோசமாக இருந்தது. அதன்பின்னர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கும் அறிமுகமானார். மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார் .இவ்வளவு மோசமாக இந்திய அணிக்காக தற்போது வரை யாரும் விளையாடியதில்லை. இவரை இந்திய அணியில் தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம்.

ரமேஷ் பவர் :

- Advertisement -

இவர் வலதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆவார் . மும்பையைச் சேர்ந்தவர். இவரது காலகட்டத்தில் இந்திய அணிக்கு ஹர்பஜன்சிங், அனில் கும்ப்ளே போன்ற பல ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இருந்தாலும் இவரை அணியில் சேர்த்தனர். 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை எடுத்தார். பேட்டிங்கில் பெரிதாக இவரால் ஜொலிக்க முடியவில்லை. அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

Yograj

யோக்ராஜ் சிங் :

- Advertisement -

இவர் வேறு யாருமில்லை, இந்தியாவின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை தான். இவர் கபில்தேவ் காலத்தில் விளையாடியவர். 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமகி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் இவர் ஆல்ரவுண்டர் ஆவார். பஞ்சாபைச் சேர்ந்த இவரை அந்த காலகட்டத்தில் கபில்தேவை தாண்டி வேறு ஆல் ரவுண்டரும் இந்திய அணியில் இல்லை என்று எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இவரும் இந்திய அணியில் தேவையில்லாத ஆணி தான்.

லட்சுமி ரத்தன் சுக்லா

- Advertisement -

உள்ளூர் போட்டியில் நன்றாக விளையாடியதற்காக இந்திய அணியில் எடுக்கப்பட்டவர். ஆனால் சர்வதேச போட்டிகளில் இவரது திறமை எடுபடவில்லை. வேகபந்து வீச்சாளரான இவர் மிகவும் மெதுவாக வீசுவார். பேட்டிங்கும் பிடிப்பார், ஆனால் மிகவும் மெதுவாகத்தான் அடிப்பார். 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வரும் 13 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அதன்பின்னர் இர்பான் பதான் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிந்து விட்டது.

Dube

ஷிவம் துபே :

சமீப காலத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் அதிகமாகிவிட்டனர்.அவர்களில் இவரும் ஒருவர். மும்பையைச் சேர்ந்தவர். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஆனதால் விஜய்சங்கர் களமிறக்கப்பட்டார். அவருக்கு மாற்று வீரராக வந்தவர்தான் இவர். இடதுகை பேட்ஸ்மேன் வலது கை வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டியிலும் 13 டி20 போட்டிகளின் தற்போதுவரை விளையாடியுள்ளார். மொத்தம் 176 ரன்களை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்றோர் இருக்கும் அணியில் இவர் ஒரு தேவையில்லாத ஒரு வீரரைப் போன்று தான் இருக்கிறார். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று கடினம் தான்.

Advertisement