நமீபியா அணிக்கெதிரான கடைசி போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நமீபியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது.

indvsnam

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் இப்படி கருப்பு பட்டை அணிந்து விளையாட என்ன காரணம் ? என்பது குறித்த கேள்வியும் அதிகளவு எழுந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்று இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் போதெல்லாம் ஏதாவது ஒரு துக்கத்தை அனுசரிக்க தான் அது போன்ற செயலில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் தற்போதும் துக்கத்தை அனுசரிக்கத்தான் அவர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Tarak

அந்த வகையில் 71 வயதான டெல்லி பயிற்சியாளர் தரக் சின்ஹா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் பயின்றுள்ளனர். குறிப்பாக இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் ரிஷப் பண்ட் அவரது தலைமையின் கீழ் கிரிக்கெட் பயின்றவர். அதுமட்டுமின்றி ஆசிஷ் நெக்ரா, ஆகாஷ் சோப்ரா, ஷிகார் தாவன் போன்ற பல இந்திய வீரர்கள் இவரின் கீழ் பயின்று உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். தனது கடைசி போட்டியின் டாஸிற்கு பிறகு – கோலி பேசியது என்ன?

டெல்லி வீரர்கள் பலரும் இவரிடம் பயின்ற நிலையில் சிறப்பான இந்த பயிற்சியாளரின் மறைவை கவுரவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் இன்றைய போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Advertisement