ப்ராக்டீஸ்க்-காக 42 கி.மீ பயணம். குளிர்ந்த சான்வெஜ். குளிர்ந்த பழங்கள் – ஐ.சி.சி யிடம் புகார் அளித்த இந்திய வீரர்கள்

DK-and-Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா பயணித்து அங்கு நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது மெல்போர்ன் மைதானத்தில் கடைசி பந்தில் வெற்றியினை பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து இந்தியா பங்கேற்க இருக்கும் இரண்டாவது போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

Hardik Pandya

- Advertisement -

இந்த போட்டிக்காக ஏற்கனவே மெல்போர்ன் நகரில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர்கள் சிட்னி நகருக்கு வந்து அடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது குளிர்காலம் என்பதனால் வீரர்கள் போதுமான அளவு பயிற்சியினை மேற்கொண்டு சரியான அளவில் ஓய்வையும் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிட்னி நகருக்கு வந்தடைந்த இந்திய வீரர்கள் தங்களது பயிற்சிக்குப் பிறகு சரியான உணவு கிடைக்கவில்லை என்று நிர்வாகத்திடம் புகார் அளிக்கவே தற்போது பிசிசிஐ ஐசிசி-யிடம் இது குறித்து ரிப்போர்ட் செய்துள்ளது. அதன்படி சிட்னி நகரில் பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்களுக்கு பயிற்சிக்கு சரியான ஏற்பாடுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Kohli practice

குறிப்பாக பயிற்சிக்காக 42 கிலோ மீட்டர் பயணித்த இந்திய வீரர்கள் அங்கு பயிற்சியை முடித்த பிறகு சரியான லன்ச் கிடைக்கவில்லை என்று அந்த ரிபோர்ட்டில் தெரிவித்துள்ளது. வீரர்கள் பயிற்சி முடிந்து சாப்பிட சென்றதும் சூடான சாப்பாடு கிடைக்கும் என்ற நினைத்த அவர்களுக்கு குளிர்ந்த சாண்ட்விச், பழங்கள் மற்றும் சில குளிரான உணவுகளே கிடைத்துள்ளது.

- Advertisement -

சூடான உணவு ஏதும் இந்திய வீரர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் வீரர்கள் மதிய உணவினை சாப்பிடாமல் தவிர்த்து பின்னர் மீண்டும் டீம் ஹோட்டலுக்கு வந்த பிறகே சாப்பிட்டுள்ளனர். இப்படி இந்திய வீரர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணவை வழங்காததால் வீரர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற டாப் 7 வீரர்களின் பட்டியல்

இதன் காரணமாக எங்களுக்கு உணவு சூடாக கிடைக்கவில்லை என்றும் சரியான வகையில் சத்தினை அளிக்கும் எந்தவித உணவு வகைகளும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகமும் தற்போது ஐசிசி-யிடம் முறையிடவே ஐசிசி-யும் விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

Advertisement