இந்திய வீரர்களில் ஜிகிரி தோஸ்த் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும் பிரண்ட்ஸ் இவங்கதான் – பட்டியல் இதோ

- Advertisement -

ஆடுகளத்திலும், ஆடுகளத்திற்கு வெளியையும் சிறந்த நண்பராக இருக்கும் சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை தற்போது பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிரிக்கெட் நண்பர்களுடனும் ரசிகர்களுடனும் உரையாடி வருகின்றனர். குறிப்பாக பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிரிக்கெட் நண்பர்களை சமூகவலைதளத்தில் சீண்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வளர்க்கப்பட்ட கிரிக்கெட் நண்பர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Yuvi

- Advertisement -

யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் :

இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தவர்கள். சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர். அதேநேரத்தில் 2007ஆம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது இருவருமே அணியில் இருந்தனர். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் இருவரும் வேறு வேறு அணிக்காக ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோகித்சர்மா – சாஹல் :

- Advertisement -

ரோகித் சர்மா மும்பையை சேர்ந்தவர் அதேநேரத்தில் சாஹல் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர்கள் இருவருக்கும் நட்பு 2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வான போது உருவாகியது. 2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றது .அந்த நேரத்தில் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறினர். பின்னர் இந்திய அணிக்காக ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக ஆடியுள்ளனர். அதனை தாண்டி சமூக வலைத்தளத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக கலாய்த்து கொள்வார்கள். அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர்.

Agarwal

மயாங்க் அகர்வால் மற்றும் கே எல் ராகுல் :

- Advertisement -

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் துவக்க வீரர்கள் இவர்கள் இருவரும் தான். இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களது . நட்பு பயணம் மிக நீண்டது தற்போது இந்திய அணிக்காக ஒருசேர துவக்க வீரர்களாக ஆடவிருக்கின்றனர். அந்த அளவிற்கு இருவரும் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கின்றனர்.

விவிஎஸ் இலட்சுமணன் – முரளி கார்த்திக் :

- Advertisement -

இந்த நட்பு இணை சற்று வித்தியாசமானது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏனெனில் முரளி கார்த்திக் ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்காமல் இருந்தவர். ஆனால் தற்போது இருவரும் சேர்ந்து வர்ணனையாளராக பணியாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் இருவரும் நண்பர்களாக மாறி விட்டனர். சமீபத்தில் விபிஎஸ் லட்சுமணன் எனது மிகச் சிறந்த நண்பராக இருக்கிறார் என்று முரளி கார்த்திக் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

raina-dhoni

சுரேஷ் ரெய்னா – மகேந்திரசிங் தோனி ;

இந்திய அணிக்காக இருவரும் மிக இளம் வயதிலேயே ஒன்றாக ஆடத் தொடங்கிவிட்டனர். அப்போதிலிருந்து தற்போதுவரை இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர். தோனியின் தலைமையில் பலநூறு போட்டிகளில் விளையாடியுள்ளார் ரெய்னா. அவரது தலைமையில் ஆட ரெய்னா எப்போதும் தயாராக இருப்பார் .சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பத்து வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக ஆடியுள்ளனர். இவர்களது நட்பு கதைகள் பல நூறு பக்கங்களை தாண்டி செல்லும் அளவிற்கு இருக்கிறது.

இதேபோன்று ஹார்டிக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோரது நட்பினையும் கூறலாம். அவர்கள் இருவரும் ஒன்றாக அரட்டை அடிப்பதும் சரி, சச்சைகளில் சிக்குவதும் சரி இப்படி பல விடயங்களை நாம் பார்த்திருக்கிறோம். இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கிரிக்கெட் வீரர்களின் நட்பினை குறித்து கமெண்ட் செக்சனில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement