போட்டியின்போது எதிரணியில் ஆளில்லை என்பதால் அவங்களுக்காக பீல்டிங் செய்த இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Sachin

சர்வதேச கிரிக்கெட்டிலும் நாம் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டை போல ஒரு சில விதிகள் இருக்கிறது. அது அந்தந்த நேரத்திற்கு தகுந்தபடி நடுவர்கள் எடுக்கும் முடிவின்படி அமைகிறது. ஒரு சில நேரங்களில் எல்லாம் அணியில் பன்னிரண்டாவது வீரர் இல்லாத காரணத்தால் பயிற்சியாளரே உடை அணிந்து கொண்டு வந்து பீல்டிங் செய்த நிகழ்வு எல்லாம் இருக்கிறது. இப்படி இந்திய வீரராக இருந்துகொண்டு வேறுவழியின்றி மற்ற நாட்டு அணிக்கு விளையாடிய இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

சச்சின் டெண்டுல்கர் :

1986ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. அப்போது பாகிஸ்தான் அணியில் ஒரு வீரர் இல்லாத காரணத்தால் 15 வயதான இளம் வீரர் சச்சின் டெண்டுல்கர் களம் இறக்கி விடப்பட்டு பாகிஸ்தான் அணிக்காக பீல்டிங் நிறுத்தப்பட்டார். இதனை சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார் .

Mandeep

மந்தீப் சிங் :

- Advertisement -

இவர் தற்காலத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் ஒரு இந்திய வீரர். இந்திய அணிக்காக இரண்டு போட்டிகளில் ஆடியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரிலும், பஞ்சாப் அணிக்கு முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது அந்த அணியின் ஒரு வீரருக்கு சென்னையில் உணவு ஒத்துவரவில்லை. இதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது எதிரணியாக இருந்த இந்திய அணியின் வீரர் மந்தீப் சிங் அந்த அணி பீல்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dravid 1

ராகுல் டிராவிட் :

2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் ஸ்காட்லாந்து அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ராகுல் டிராவிட். அப்போது அந்த அணிக்கு 11 போட்டிகளில் விளையாடி கொடுத்தார். இதில் மொத்தம் 600 ரன்களும் அடிட்திருந்தார் ராகுல் டிராவிட். அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் ஒப்பந்தமாகி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஒரு நாட்டில் பிறந்து அந்நாட்டிற்காக விளையாட முடியாமல் வேறு நாட்டில் விளையாடிய வீரர்களையும் நாம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.