கடைசி நாளில் இது நடந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றிபெறும் – இல்லனா அவ்ளோதான்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக 191 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 290 ரன்கள் குவித்தது. இதனகாரணமாக இந்திய அணி 99 ரன்கள் பின்னிலை அடைந்தது.

Robinson

- Advertisement -

இந்நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது இம்முறை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 466 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் அடித்துள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளான ஐந்தாம் நாளில் மேலும் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்த கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

Burns

ஏற்கனவே இந்த மைதானம் முதல் 4 நாட்களிலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்ததால் நிச்சயம் கடைசி நாளிலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடைசி நாளில் மொத்தம் 291 ரன்களை மூன்று செஷன்களில் இங்கிலாந்து அணி அடிக்க வேண்டும் அதாவது ஓவருக்கு 4 ரன்கள் வீதம் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது சற்று கடினமானதுதான்.

Root

எனவே இந்திய அணி முதல் செஷனில் 2 ஓப்பனர்களையும் வீழ்த்தி மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதாவது 4 விக்கெட்டுகளை முதல் செஷனில் வீழ்த்தினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதே வேளையில் இங்கிலாந்து அணி முதல் செஷனில் 100 ரன்களுக்கு மேல் அடித்தால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement