கடந்த 18 வருஷமா இந்திய அணி நியூசிலாந்து அணிக்கெதிராக வைத்திருக்கும் மோசமான சாதனை – வெளியான புள்ளிவிவரம்

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த போட்டி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் பலரும் கணித்துள்ளார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலை இந்திய அணியை விட நியூசிலாந்திற்கு தான் அதிக சாதகம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

INDvsNZ

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்திய முன்னாள் வீரர்கள் சிலரும் நியூசிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறியுள்ளனர். அதனை தாண்டி தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரம் ஆனது இந்திய ரசிகர்களை சற்று வருத்தமடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி நடத்திய போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதே கிடையாது என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் கங்குலி தலைமையிலான இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஐசிசி நடத்திய எந்தவொரு தொடரிலும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதே கிடையாது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

NZ

அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 126 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தாலும் அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 79 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் அடித்தது.

Dhoni-2

அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்படி ஐசிசி நடத்திய தொடர்களில் கடைசியாக 18 ஆண்டுகளில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதே கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலாவது இந்திய அணி நியூசிலாந்தை விழ்த்துமா ? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement