ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்திய அணி இறுதிப்போட்டி தகுதி பெறுமா ? – விவரம் இதோ

ind-2
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி சிறப்பாக நடத்தி வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரையிலான இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான லீக் ஆட்டங்களில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 9 நாடுகளின் அணிகள் இதுவரை பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஆறு அணிகளோடு டெஸ்ட் தொடர்கள் விளையாட வேண்டும். அதில் மூன்று டெஸ்ட் தொடரகள் சொந்த மண்ணிலும், மூன்று தொடர் டெஸ்ட் தொடர்கள் அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும்.

Ashwin 3

- Advertisement -

அந்த தொடர்கள் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் வரை அடங்கிய டெஸ்ட் தொடர்களாக இருக்க வேண்டும் என்பது ஐ.சி.சி. யின் நிபந்தனை. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் ஜூன் 2021’ல் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். அதில் ஜெயிக்கும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதில் நியூசிலாந்து அணி 70 சகிதவிகிதத்துடன் 420 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டியில் விளையாடுவதையும் அந்த அணி தற்பொழுது உறுதிபடுத்தியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடப் போவது எந்த அணி என்பதற்கு தான் இப்போது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடர் தான் இறுதி போட்டியில் விளையாடப் போகும் மற்றொரு அணி எது என்பதை உறுதி செய்யும் டிசைடர் தொடராக அமைந்துள்ளது.

INDvsAUS

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது நம் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தியா 71.70 சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா , இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை டெஸ்ட்டின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதனால் தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய தற்பொழுது 0 – 1 என பின்தங்கியுள்ளது. எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவாமல் இந்தியா குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடலாம். இல்லையெனில் இந்தியா அந்த வாய்ப்பை இழந்து விடும். முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இருந்தாலும் இறுதி போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி இந்த தொடரை 3 – 1, 3 – 0 அல்லது 4 – 0 என்கிற வசம் கைப்பற்றியாக வேண்டும்.

Ind-lose

அதனால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகளை இங்கிலாந்து கட்டாயமாக பெற வேண்டும்.   அவ்வாறு இல்லாமல் இங்கிலாந்து அணி 1 – 0, 2 – 0, 2 – 1 என்கிற வசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு இறுதி போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பு கை தவறி போய் விடும். எனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா ரசிகர்களும் மிக ஆர்வமாக இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரை பார்த்து வருகிறார்கள்.

Advertisement