4 ஆவது டி20 போட்டியில் இந்த 3 மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும் – அழுத்தத்தில் கேப்டன் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsENG

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்தே ஆக வேண்டிய அழுத்தத்தில் கேப்டன் கோலி உள்ளார். ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் ராகுலுக்கு பதில் இஷான் கிஷனை துவக்க வீரராகவும், சூர்யகுமார் யாதவை மிடில் ஆர்டரில் இறக்கவும் அழுத்தங்கள் எழுந்து வருகின்றன.

- Advertisement -

ஆனாலும் ராகுல் தொடர்ந்து தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று கடந்த போட்டியின் போது கோலி அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். இருப்பினும் அதனை தவிர்த்து மூன்று முக்கிய மாற்றங்களை இந்த போட்டியில் கோலி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்படி இரண்டாவது போட்டியின்போது அறிமுக வாய்ப்பைப் பெற்ற சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யாமலேயே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் தற்போது மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

sky

இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சாஹல் ஆகியோர் ரன்களை அதிக அளவு விட்டு கொடுப்பதாலும் விக்கெட்டுகளை விரைவில் விழுந்த தவறுவதால் இருவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் அவர்களுக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சைனி மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் அணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று மாற்றங்களையும் கட்டாயம் இந்திய அணி இந்த போட்டியில் செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement