சுப்மன் கில்லுக்கு அந்த பிரச்சனை இருக்கு.. அவரை பர்ஸ்ட் அந்த பொறுப்புல இருந்து தூக்குங்க – ரசிகர்கள் கோரிக்கை

Gill
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இந்த ஒருநாள் தொடரை இழந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் பும்ரா, பாண்டியா, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் என பல சீனியர் வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லை வளர்ப்பதற்காகவே இந்திய நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில் துணை கேப்டனாக இந்த தொடரில் விளையாடிய சுப்மன் கில் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று போட்டிகளிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை தந்துள்ளார்.

- Advertisement -

முதல் போட்டியில் 35 பந்துகளை சந்தித்த அவர் 16 ரன்களும், இரண்டாவது போட்டியில் 44 பந்துகளை சந்தித்த அவர் 35 ரன்களும், கடைசி போட்டியில் 14 பந்துகளை 6 ரன்கள் என மூன்று போட்டிகளில் மொத்தமாக 57 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை தந்துள்ளார். அவரது இந்த ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் இப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கா துணை கேப்டன் பதிவை வழங்க வேண்டும்.

இதையும் படிங்க : இப்போவாச்சும் ஒத்துக்குவிங்களா? அவர் இல்லனா இந்திய அணி ஜீரோ தான்.. ஜூனாய்ட் கான் விமர்சனம்

அந்த பதிவியின் காரணமாகவே அவர் இப்படி மெத்தனமாக விளையாடுவதாகவும், துணை கேப்டன் பதவி இருந்தால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது என்றும், பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டால் அவரது பேட்டிங்கில் சிக்கல் ஏற்படும் என்றும் அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement