
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது பெர்த் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா திரும்புவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. அப்படி ரோஹித் அணியில் இணைந்தாலும் அவரை துவக்க வீரராக விளையாட வைக்கக்கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏனெனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கிய வேளையில் ஐந்து ரன்களிலேயே முதல் விக்கெட்டை இழந்து இருந்தனர்.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின்போது பொறுப்புடன் விளையாடிய அவர்கள் இருவருமே மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்து அசத்தினர். அதோடு அவர்களது இந்த பிரமாதமான அடித்தளம் காரணமாக இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்ததால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்சின் போது ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், கே.எல் ராகுல் 77 ரன்களையும் குவித்துள்ளனர். ஆஸ்திரேலியா மண்ணில் பல ஆண்டுகள் கழித்து முதல் ஜோடியாக 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ள இவர்கள் இருவரையும் இந்த தொடர் முழுவதுமே துவக்க வீரர்களாக களம் இறக்கினால் அது இந்திய அணிக்கு நல்லது என்பதனால் ரோகித் சர்மாவை பேட்டிங் வரிசையில் கொஞ்சம் பின்னுக்கு தள்ளலாம் என்றும் ரசிகர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? – இதை மட்டும் பண்ணா வெற்றி உறுதி
ஆனாலும் கேப்டன் ரோகித் சர்மா அனுப்பி திரும்பும் பட்சத்தில் நிச்சயம் அவர்தான் துவக்க வீரராக களமிறங்குவார். அதேபோன்று தற்போது துவக்க வீரராக இருக்கும் கே.எல் ராகுல் ஆறாவது இடத்தில் விளையாடுவார் என்பதே நிதர்சனமான உண்மை.