இனிமே இவரை அணியில் இருந்து நீக்க கூடாது. ரசிகர்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – குழப்பத்தில் கோலி

Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

pant-1

- Advertisement -

இந்திய இளம் வீரர்களான நடராஜன், சுப்மன் கில், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சாஹாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற இவர் இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட ஆறு இன்னிங்சில் 29,0*, 36,97, 23, 89* ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் பண்ட்.

Pant

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கீப்பிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல கேட்ச்சுகளை தவற விட்டதன் காரணமாக பண்ட் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் பேட்டிங் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். பிரிஸ்பன் மைதானத்தில் இந்திய அணி வரலாற்று சாதனை படைக்க முக்கிய காரணமாக பண்ட்டை இனி அணியில் இருந்து வெளியேற்றினால் சரியாக இருக்காது.

pant

எனவே ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யவில்லை என்றாலும் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஒரு சவாலாக இருக்கும். எதிர்வரும் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி பண்ட்டை அணியில் தேர்வு செய்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement