அடுத்த போட்டியில் நிச்சயம் இவர் இந்திய அணியில் விளையாடக்கூடாது – ரசிகர்கள் கதறல்

Pant
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித் புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.

jadeja 1

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதில் புஜாரா மற்றும் கில் ஆகியோர் அரை சதம் விளாசியதே அதிகபட்சமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது.

லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட விருத்திமான் சாஹாவிற்கும் பதிலாக 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெற்ற விளையாடி வருகிறார். விருத்திமான் சாஹாவை விட ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதால் அணியில் இடம்பெற்றார். ஆனால் ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

pant

இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் கீப்பிங்கில் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று பல விமர்சனங்கள் வந்தது. இவர் மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் புகோவ்ஸ்கியின் இரண்டு கேட்ச்களை தவிறவிட்டார். இதனால் புகோவ்ஸ்கி 62 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.

pant 1

ரிஷப் பண்ட் இந்த கேட்ச்களை தவிறவிட்டதனால் இந்திய அணி தோல்வி அடையக் கூடும் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 4வது டெஸ்ட் போட்டியில் பண்ட்டிற்கு பதிலாக மீண்டும் விருத்திமான் சாஹாவை அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement