4 ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் இடத்தில் இவருக்கே வாய்ப்பு தர வேண்டும் – ரசிகர்கள் கோரிக்கை

Bumrah-1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றும், ஒரு போட்டியை டிராவும் செய்திருக்கின்றன. 4வது போட்டி வரும் 15ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கப்போகிறது. இந்த தொடரில் குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்தனர்.

aus

- Advertisement -

ஒருநாள் தொடர் முடிவடைந்தவுடன் டெஸ்ட் தொடர் துவங்க இருந்த அந்த நேரத்தில் தான் இசாந்த் சர்மா தொடரில் கலந்து கொள்ளாமல் காயத்தின் காரணமாக வெளியேறினார். முதல் போட்டியில் முடிவடைந்தவுடன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக வெளியேற 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் காயமடைந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

மூன்றாவது போட்டியில் முடிவடையும்போது மூன்று வீரர்கள் மொத்தமாக வெளியேறிவிட்டனர். ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் இருந்து வெளியேறினார்கல். இதில் கண்டிப்பாக ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை நிரப்ப ஒரு பந்துவீச்சாளர் தேவை. இந்திய அணியில் தற்போது காயம் அடையாமல் தாகூர் மற்றும் தங்கராசு நடராஜன் ஆகியோர் இருக்கின்றனர்.

bumrah

இதில் ஷர்துள் தாகூர் டெஸ்ட் போட்டிகளில் எப்படி பந்து வீசுவார் என்பது அனைவரையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரவிந்திர ஜடேஜா அதற்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடிக்க பெரும் வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Nattu-1

4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணி :

1) ரோஹித் 2) கில் 3) ரஹானே 4) புஜாரா 5) பண்ட் 6) சஹா 7) குலதீப் 8) அஷ்வின் 9) சைனி 10 ) சிராஜ் 11) நடராஜன்.

Advertisement