இங்கிலாந்து தொடருக்கு மட்டுமல்ல. இந்திய அணிக்கு முழுநேர கோச்சாக இவர்தான் வரனும் – ரசிகர்கள் வேண்டுகோள்

Dravid

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மிகப்பெரிய தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. இந்நிலையில் இதற்கிடையே ஜூலை மாதம் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Sl

முதன்மை இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இலங்கையிலும் மற்றொரு தொடர் நடைபெறுவதால் இளம் வீரர்களை கொண்ட புதிய இந்திய அணி இந்த தொடரில் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது. தவான் தலைமையில் பங்கேற்கவுள்ள இந்த இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்க வேண்டியுள்ளதால் ராகுல் டிராவிட் இந்த புதிய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இளம் வீரர்களை வழி நடத்த உள்ள ராகுல் டிராவிட் இந்திய அணியின் முழுநேர நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

dravid 2

ஏனெனில் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்தபோது டிராவிட் பயிற்றுவித்த வீரர்கள்தான் இன்று இந்திய அணியின் சிறப்பான வீரர்களாக மாறியுள்ளனர். டிராவிட்டின் பயிற்சியில் ரிஷப் பண்ட், சூரியகுமார், இஷான் கிஷன், ப்ரித்வி ஷா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் போன்ற பல வீரர்கள் இந்திய அணிக்காக தற்போது விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராகவும் செயல்பட்டு வரும் டிராவிட் இளம் வீரர்களை ஊக்குவித்து வருவதால் நிச்சயம் அவர் இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக மாறவேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement