உலகக்கோப்பை டி20 தொடரில் இவரே ஓப்பனரா விளையாடனும். ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு – விவரம் இதோ

IND

2021 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பெருகிவரும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழ்நிலையில் பிசிசிஐ தவித்து வருகிறது. இதன் காரணமாக உலக கோப்பை டி20 தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் பாதியிலேயே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இத்தொடரை முடித்துவிட்டு உலக கோப்பை தொடரை நடத்த பிசிசிஐ தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை இந்திய அணி இலங்கை தொடருக்கு அனுப்புகிறது. அதன் பின்னர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் இந்திய அணியின் ஓபனராக ரோஹித்துடன் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. கடந்த பல தொடர்களாகவே இந்திய டி20 அணியின் ஓப்பனர்கள் தொடர்ந்து மாற்றப்படுகின்றனர். தவான், ராகுல், அகர்வால் என பலரும் ரோகித் சர்மாவுடன் களமிறக்கப்பட்டு சோதிக்கப் பட்டனர். இறுதியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய கோலி தான் டி20 உலக கோப்பை தொடரில் ஓப்பனராக விளையாட போவதாக அறிவித்திருந்தார்.

Dhawan

இந்நிலையில் அவர் எடுத்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் மூன்றாவது இடத்திலேயே விளையாடவேண்டும். டி20 உலககோப்பையில் தவான் தான் துவக்க வீரராக விளையாட வேண்டும். ஐ.பி.எல் தொடரில் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை பார்த்திருந்தால் அவரது புரிந்து இருக்கும் என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் இலங்கை தொடரிலும் அவரே கேப்டன் மற்றும் ஓப்பனராக விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி தவானை டி20 அணியில் இருந்து நீக்கக் கூடாது என்றும் அவர் இருக்கும் ஃபார்மில் டி20 உலகக் கோப்பையை எதிர் கொண்டால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்றும் ஐசிசி தொடர் என்றாலே தவான் தான் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement