இவரை டீம்ல எடுத்துட்டு ஏன் விளையாட சேன்ஸ் தரமாட்டறீங்க – ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் வீரருக்கு குவியும் ஆதரவு

IND
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வந்தாலும் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்தும், அணியில் உள்ள குறைகள் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்து வருகின்றனர்.

ashwin 2

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரு வீரருக்கு சப்போர்ட் செய்து தங்களது கருத்துக்களை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வீரர் யாரெனில் மிடில் ஆர்டர் வீரரான ஹனுமா விஹாரி தான். இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் பார்மட்டில் மட்டும் இடம் பிடித்து விளையாடி வரும் இளம் வீரரான விஹாரி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தனது தட்டுப்பாட்டத்தின் மூலம் சிறப்பாக விளையாடி இந்திய அணியை டிராவிற்கு அழைத்துச் சென்ற அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் களத்தில் நிற்கும் ஆற்றல் கொண்டவர் என்பதை அந்தப் போட்டியில் நிரூபித்தார். அதேபோன்று தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடிக்கவும் அவரால் முடியும்.

Vihari

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஒரு முழுநேர ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விஹாரியை உலகச் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட வைக்காதது தவறு என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி வரும் இங்கிலாந்து தொடரில் அவர் நிச்சயம் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் மற்ற வீரர்கள் அனைவரும் ஒருநாள் டி20 போட்டிகள் என அனைத்து பார்மட்டிலும் விளையாடினாலும் விகாரி டெஸ்ட் பார்மட்டில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தி விளையாடி வருகிறார்.

Vihari

இதனால் அவரால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அது மட்டுமின்றி இங்கிலாந்தில் ஏற்கனவே கவுண்டி போட்டிகளில் அவர் சமீபத்தில் விளையாடி உள்ளதால் நிச்சயம் அவருக்கு இங்கிலாந்து மைதானம் விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நிச்சயம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement