இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் பிக் பாஸ் ஆரிக்கு சப்போர்ட் செய்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்

INDvsAUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தற்போது கடைசி நாளில் 407 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வருகையில் ஏற்கனவே இனவெறி குறித்த சர்ச்சை, இந்திய வீரர்களின் புகார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் மன்னிப்பு என போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

pujara 1

அதன்படி இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் பேனர் பிடிப்பதும், புகைப்படமாக காண்பிப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் யார் என்பது குறித்து ரசிகர்கள் இருவர் பேனர் பிடித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இந்த கடைசி எவிக்ஷன் போது ஷிவானி நாராயணன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆரி, ரியோ, சோம்சேகர், கேப்ரியாலா, ரம்யா, பாலாஜி ஆகிய 6 பேர் இறுதிக் கட்டத்திற்கு சென்றுள்ளனர். வழக்கமாக நான்கு பேருடன் நடைபெறும் இந்த பைனல் இம்முறை 6 பேருடன் நடைபெறுவதால் யார் வெற்றியாளர் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை காண்பித்துள்ளனர். அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் இன் வின்னர் ஆக ஆரியே இருப்பார் என்று அவருக்கு ஆதரவாக பேனர் பிடித்துள்ளனர் இரு ரசிகர்கள். மேலும் அதனை எழுதியது மட்டுமின்றி ஹாஷ்டேக் மூலம் கடவுள் இருக்கான் குமாரு பை சதீஷ் என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

- Advertisement -

aari

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பரபரப்பான இந்த போட்டிக்கு மத்தியில் அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் சரியாக ஆறு தினங்களில் டைட்டில் யாருக்கு என்பது தெரிந்து விடும் அது வரை நாம் காத்திருக்கலாம் நண்பர்களே.