- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அரையிறுதி தோல்வி எதிரொலி : அவரை சேர்க்காம ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க – ரசிகர்கள் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்து இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வரும் 13-ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவு 168 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாமல் அரையிறுதி சுற்றினை இந்திய அணி எட்டியிருந்தாலும் அரையிறுதியில் இந்திய அணியின் படுமோசமான பவுலிங் அப்பட்டமாக வெளிப்பட்டது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வின் ஆகியரது பந்துவீச்சு இந்த தொடர் முழுவதுமே எடுபடாத வேளையில் யுஸ்வேந்திர சாஹலை சேர்த்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கம்பீர் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் கூறியது மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள், நிபுணர்கள் என பலரும் கூறியிருந்தனர்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரஷீத் கான், ஷதாப் கான், அடில் ரஷீத், ஆடம் ஜாம்பா, ஷம்சி, ஹசரங்கா போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அற்புதமாக செயல்பட்ட வேளையில் இந்த தொடரில் இந்திய அணியில் மட்டும் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்த தொடர் முழுவதுமே வெளியே வைக்கப்பட்டிருந்த அவர் ஆஸ்திரேலியா மைதானங்களில் பந்துவீசி இருந்தால் நிச்சயம் அவர் பிளைட் செய்து பந்தை வீசி இருப்பார் என்றும் அதனால் விக்கெட்டுகள் கிடைத்திருக்கும் என்றும் பலரும் தற்போது கூறி வருகின்றனர்.

- Advertisement -

அணியில் அவரை தேர்வு செய்யாமல் பெஞ்சில் அமர வைத்து இந்திய அணி மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று தற்போது பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த அரையிறுதி போட்டியின் போது கூட இரண்டு ஓவர்களை வீசிய அஷ்வின் 27 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : அதைப்பத்தியெல்லாம் பேச இது நேரம் இல்ல. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து – ராகுல் டிராவிட் பேசியது என்ன?

இதனால் கட்டாயம் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலுக்கு வாய்ப்பை வழங்காமல் இந்திய அணி பெரிய தவறு செய்து விட்டதாக ரசிகர்களும் இதனை சுட்டிக்காட்டி தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by