ஒருநாள் தொடர் : 3 ஒருநாள் போட்டிகளிலும் இதற்கு மட்டும் அனுமதி இல்லை – கிரிக்கெட் போர்டு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த டி20 தொடர் முழுவதும் அகமதாபாத் மைதானத்திலேயே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

cup

இந்த 3 ஒருநாள் போட்டிகளும் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 23, 26 மற்றும் 28ஆம் தேதிகளில் இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அதிகாரபூர்வமான அட்டவணையை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேவில் நடத்தப்படும் போட்டிக்கான கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி புனேவில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் அதிகளவு பரவ வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம் விழுந்துள்ள காரணத்தால் ரசிகர்கள் இன்றி அங்கு போட்டியை நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் புனேவில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

IND

மேலும் மகாராஷ்டிர முதல்வர் மற்றும் கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியோருக்கு சந்திப்பிற்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புனேவில் போட்டி நடந்தாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி போட்டியை நடத்தி கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ind-1

இதனால் இந்த 3 ஒருநாள் போட்டிகளிலுமே ரசிகர்கள் இன்று காலி மைதானத்தில் நடைபெறும் என்று ம், ரசிகர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.