தோனியை கடந்து தற்போது தனது பெயரை ஒலிக்க செய்த ரிஷப் பண்ட் – இன்றைய போட்டியில் அரங்கேறிய சுவாரசியம்

Pant-3

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இருக்கும் போதே அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியின் நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டவர் தான் இளம் வீரரான ரிஷப் பண்ட். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறும் போது அவருக்கு நிகரான வீரர் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ச்சியான வாய்ப்புகளை ரிஷப் பண்ட்டிற்கு கொடுத்து வந்தனர். அவரும் தனது அதிரடி மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகி துவக்கத்தில் சில தொடர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Pant

அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு சோதனைக் காலம் ஏற்பட்டது. துவக்க காலத்திலேயே என்னவோ டோனியுடன் அவரை ஒப்பிடதால் அடுத்தடுத்து சரிவுகளை ரிஷப் பண்ட் சந்தித்தார். ஒருகட்டத்தில் தொடர் சொதப்பலான ஆட்டத்தினால் அவரது இடம் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அணிகளில் பறிபோனது. மேலும் தொடர்ச்சியான பேட்டிங் சொதப்பலால் அவரது விக்கெட் கீப்பிங்கிலும் கவனம் சிதறியது. இதன் காரணமாக பல தொடர்களில் அவர் கீப்பிங்கின்போது தவறு செய்தார். அதன் காரணமாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “தோனி தோனி” என்று கேலி செய்து மைதானத்தில் குரலெழுப்பினர்.

அப்போதெல்லாம் இந்திய அணி நிர்வாகமும், கேப்டன் கோலியும் பண்ட்டிற்கு ஆதரவு தந்து இளம் வீரரை ஆதரித்து உங்கள் குரல்களை கொடுத்தால் அவர் இன்னும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும் அதை தவிர்த்து இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் சமீபகாலமாக பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இழந்த தனது இடத்தை மீட்க வேண்டும் என்ற குறிக்கோளில் டெஸ்ட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

pant

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்த பண்ட் இங்கிலாந்து தொடரில் தற்போது அசத்தலான பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிவற்றை செய்து வருகிறார். மேலும் இன்று நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 118 கைகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ஒரு ரன்களை குவித்த ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார்.

- Advertisement -

எந்த இடத்தில் தவறு செய்தாரோ அதே இடத்தில் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே டெஸ்ட் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் எந்த இடத்தில் ரசிகர்களால் தோனியின் பெயரை வைத்து கேலி செய்யப்பட்டாரோ அதே போன்று மைதானத்திலேயே அவரது பெயரை இன்று ரசிகர்களின் வாயால் ஒலிக்க செய்தார்.

Pant

ஆம், இன்றைய போட்டியின் போது சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை கண்டு ரசித்த ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்தபடி “ரிஷப் பண்ட்”, “ரிஷப் பண்ட்” என்று ஆர்ப்பரித்தனர். மேலும் அவர் சதம் அடிக்கும் போதும் தங்கள் ஆரவாரத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இன்றைய போட்டியில் சதமடித்த நாயகனான ரிஷப் பண்ட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.